அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள் வெளிதானே
- 'திருமூலர்' திருமந்திரம்.
"அளித்தான் உலகெங்குந் தானான உண்மை". உலகவாழ்விற்கும் ஆன்மீக தேடலுக்கும் தேவையானது, அடிப்படையானது 'நம்பிக்கை'. ஆண்டவன் அருள் நமக்கு உள்ளது, உலகிற்கு தந்தையான பரம்பொருள் நமக்கு எல்லாச் செல்வங்களையும் அருள்வார், அளித்து விட்டார் என்று நம்பிக்கையோடு இருந்தால், பல நன்மைகளையும், அருட் செய்திகளையும், அருட்பார்வைகளையும் அளிப்பார். அவ்வகையில் திருமூலநாயனார் இந்த அருமையான பாடலில் உணர்த்துகிறார். முன்பே கூறியவாறு படியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், பிறகு உணருங்கள். உணர்ந்தால்தான் உய்வு. ஆனால் தொடங்குவதற்கு (To Start) படியுங்கள்....
கடவுள் உலகெங்கும் வியாபித்திருக்கிறான். அப்படி இருக்கையில் யார் மீது வெறுப்பு, யார் மீது கோபம், யார் மீது பொறாமை கொள்வது. சற்றே சிந்தியுங்கள்.
உலகெங்கும் தானாகவே மிளிர்கின்ற உண்மை, அந்தத்தெளிவை, உண்மையை அளித்துவிட்டான். 'தானான உண்மை'யை பற்றி எழுத பல பக்கங்கள், பல மணித்துளிகள் தேவை. அவரவர் நிலைக்கு தக்கவாறு, அறிந்தவாறு, தெளியுங்கள். Omnipresent, The Sun, The Sky - அகண்டவெளி, பூமி, எல்லாவற்றையும் சேர்த்து தன்மயமாக்கி தன்மயமாகி இருகின்றான்.
"அளித்தான் அமரர் அறியா உலகம் ":-அமரர் - தேவர்கள், விண்ணவர்கள், முனிவர்கள். அமரர் - மரணத்தை வென்றவர், மரணத்தைக் கடந்தவர்கள். இவர்கள் அறியா உலகம். பேரின்ப உலகம். பரம்பொருளைச் சிறிது அறிந்தாலேயே சித்தம் தித்திக்கும். அலைகள் இல்லா கடல் போல பேர் அமைதி. To make it simple, when the power goes off- நிலவும் நிசப்தம். ஓசையில் நிசப்தத்தையும், நிசப்தத்தில் ஓசையையும் உணர்தல் வேண்டும். ஒரு நிலை. அந்நிலையும் வர முயற்சி செய்தல் வேண்டும்.
அருட்சோதியை உணரும்பொழுது, காணும்பொழுது "அறியும் உலகம்" - அறியும் உணர்வுநிலை உணரும். உணர்வுநிலை - சொல்வது எவ்வாறு. அருணகிரிப்பெருமானே "புகல்வது எவ்வாறு" என்று கூறியுள்ளார்.
"அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்"நாம் அனைவரும் இறைவனிடம் திருவடியைத்தான் வேண்டுவோம்.வேண்ட வேண்டும் என்று நம் குருநாதர் (வாரியார் சுவாமிகள்) கூறுவார். திருமன்றுள் - சொர்க்கம், தேவருலகம், கைலாசம், சிதம்பரம் அண்டவெளியில் ஆடும் பெருமான் திருத்தாளை அளித்து விட்டானாம் திருமூலருக்கு.
"அளித்தான் பேரின்பத்து அருள் வெளிதானே"இன்பம் - பிறகு பேரின்பம். வெளியை புரியவைப்பதும், உணர்வதும் கடினமான செயல். வானத்தை முழுவதும் பார்ப்பதே கடினமான செயல். நாம் பார்க்கும் பூமியின் வானம், பூமி, பல கோள்கள், இவை அனைத்தும் வெளியில் மிதந்து கொண்டும், சுற்றிக்கொண்டும் உள்ளது. இப்பொழுது நினைத்துப்பாருங்கள் "வெளி" என்பது எவ்வளவு பெரியதென்று. 'unimaginable' or beyond imagination."அளித்தான் பேரின்பத்து அருள் வெளிதானே". To enhance. பேரின்பத்து - வெறும் வெளியே கற்பனையை கடந்தது. ஆனால் அதில் அருளும் சேர்ந்தால் அந்த வெளி- நம் பார்வைக்கு, அகக்கண் பார்வைக்கு தெரியும், வரலாம்... பார்வைக்கு வரும்.
அந்தப்பேரின்பத்து வெளியை எவ்வாறு உணர்வது. உணர முடியும். உணர்ந்து பாருங்கள். உணர்ந்தால் வரும் உணர்வை எழுத இயலாது. உணரத்தான் முடியும்.
அன்புடன்,
Dr T T Sivam